என் கிறுக்கல்களும் பொருக்கல்களும் உங்கள் பார்வைக்காக

Sunday, April 18, 2010

3. கோடை




சுண்டிக் கொண்டே இருக்கும் கடலும்
சுட்டுக் கொண்டே இருக்கும் உடலும்
மண்டிக் கொண்டே இருக்கும் அயர்வே
வழிந்து கொண்டே இருக்கும் வியர்வை
நொண்டிக் கொண்டே இருக்கும் மாடும்
நொக்கும் வெயிலால் உருகும் லாடம்
அண்டிக் கொண்டே இருக்கும் சூடும்
அழுது கொண்டே திரியும் ஆடும்.


கொட்டிய சருகு பொரித்த அப்பளம்!
கொதிக்கும் மணலை மிதித்தால் கொப்புளம்!
தொட்டியில் ஊற்றிய தண்ணீர் வெந்நீர்!
சோலை மலர்ந்த மலரும் உலரும்!
கட்டி லறையும்உ ரொட்டி அடுப்பே!
கழற்றி எறிந்தார் உடுத்த உடுப்பே!
குட்டை வறண்டது தொட்டது சுட்டது
கோடை மிகவும் கெட்டது கெட்டது!

Monday, April 12, 2010

2. மழை




வானத்தி லேபிறந்த மழையே வா! -இந்த
வையத்தை வாழவைக்க மழையே வா!
சீனிக்கரும்பு தர மழையே வா! - நல்ல
செந்நெல் செழிப்பாக்க மழையே வா!
கானல் தணிக்க நல்ல மழையே வா! - நல்ல
காடு செழிக்க வைக்க மழையே வா!
ஆன கிணறுகுளம் ஏரிஎல்லாம் - நீ
அழகுப டுத்தநல்ல மழையே வா!

2. இயற்கை
1. மழைக்காலம்




வானி ருண்டது மின்னல் வீசிற்று
மடமடவென இடித்து - பயிர்
வளர்ந்தது மழை பிடித்து.


ஆனது குளிர் போனது வெப்பம்
அங்கும்இங் கும்பெரு வெள்ளம் - அட
அதிலும் மீன்கள் துள்ளும்.


பூனை சுவரின் பொந்தில் ஒடுங்கும்
பொடிக் குருவிகள் நடுங்கும்-வண்ணப்
பூக்களில் ஈக்கள் அடங்கும்.

சீனன் கம்பளிக் குல்லாய் மாட்டிச்
சிவப்பு சால்வை போர்த்தான் - அவன்
தெருவில் வேடிக்கை பார்த்தான்!

9. வானொலி






வானொலி எல்லாம் தேனொலி ஆக்கும்
செந்தமிழ்ப் பாட்டைக் கேட்டுக் கேட்டு
நானும் மகிழ்வேன் நாடும் மகிழும்
நானிலம் எல்லாம் நன்றாய் மகிழும்!

ஏன்ஒலி செய்தார் செந்தமிழ் நாட்டில்
இன்னொரு மொழியில் அமைந்த பாட்டை?
நானும் அழவா? நாடும் அழவா?
நமது நாட்டில் அதற்கென்ன வேலை?


தெலுங்கு நாட்டில் தெலுங்கு வேண்டும்
செந்தமிழ் நாட்டில் அதற்கென்ன வேலை?
தெலுங்கு நாட்டில் செந்தமிழ்ப் பாட்டைச்
சேர்ப்பதுண்டா? இல்லவே இல்லை!


விலங்கு பறவை செந்தமிழ் நாட்டில்
விரும்பிக் கேட்பதும் செந்தமிழ்ப் பாட்டை!
குலுங்கும் அரும்பும் செந்தமிழ் நாட்டில்
குளிர்ந்த செந்தமிழ் கேட்டு மலரும்!

Saturday, February 13, 2010

எதையெல்லாம் கொண்டாடலாம் :

சமிபத்தில் அனந்த விகடனில் வெளிவந்த ஒரு விளம்பரம் சற்று
நின்று கவனிக்க வைத்தது :


1 . ஹஸ்பன்ட் இன்னைக்கு
ஜாக்கிங் போயிருக்கார் கொண்டாடுங்க :


2 . ஆடோக்காரர் மீட்டர்க்கு மேல
காசு கேக்கல கொண்டாடுங்க :


3. காஸ் சிலின்டர் ஒரு நாள் முன்னாடியே
வந்துருசு கொண்டாடுங்க :


4 . வேலைக்காரம்மா இந்த வாரம் பூராவும்
லீவு போடல கொண்டாடுங்க :


5. காலையில ஹஸ்பன்ட் காபி போட்டார்
கொண்டாடுங்க :


6. வாட்சுமேன் சில்லறைய திருப்பி தந்துடார்
கொண்டாடுங்க :


7. தொலஞ்சு போன டிரை கிளீனிங்
ரசிது கிடைச்சுடுச்சு கொண்டாடுங்க :


8. டிவி சீரியல் கு நடுவே கரண்ட்
போகல கொண்டாடுங்க :


9. சிண்டு நேத்து ராத்துரி படுக்கைய
ஈரமாகல கொண்டாடுங்க :


10 . ஹஸ்பன்ட் சினிமாவுக்கு டிக்கெட்
வாகிவந்தார் கொண்டாடுங்க .


11. இன்னக்கி காய்கரிகாரன்கிட்ட பேரம் பேசி
ஜெயிசிட்டேன் கொண்டாடுங்க :

12 . மாமியார் என்னோட சமையலை பாராட்டினாங்க
கொண்டாடுங்க :


13 . ஹஸ்பன்ட் என்னோட ஹேர் ஸ்டைல் லை
பாராட்டினார் கொண்டாடுங்க :

14 . ரவியோட ஸ்கூல் பஸ் இன்னக்கு
டைம்க்கு வந்தது கொண்டாடுங்க :


15 . பக்கத்துக்கு வீடுகாரம்மா இரவல் வாங்கின சர்கரைய
திருப்பி தந்துடாங்க கொண்டாடுங்க :


16 . என்னோட எடை 1 கிலோ குறைஞ்சு இருக்கு
கொண்டாடுங்க :


17 . சிண்டு இன்னைக்கு ஸ்கூல்la பென்சில
தொலைக்கல கொண்டாடுங்க :


18 . பப்புலு ஸ்டோரி டெல்லிங் ல
பர்ஸ்ட் பிரைஸ் கொண்டாடுங்க :

19 . வெண்டக்காய் விலை கொறைஞ்சு
இருக்கு கொண்டாடுங்க :


20 . நான் புது ஹேர் கட் பண்ணிகிடேன்
கொண்டாடுங்க :

21 . என்னோட பேவரட் பழைய
டிரஸ் எனக்கு திரும்பவும் பிட் ஆகுது
கொண்டாடுங்க :


22 .ரவி இன்னைக்கு கீரை சாபிட்டான்
கொண்டாடுங்க :


23 . நான் பெர்பெக்ட் ரவுண்டு சப்பாத்தி
பண்ணினேன் கொண்டாடுங்க :


24 . piriya சூ லேஸ் கட்ட கத்துகிட்டா
கொண்டாடுங்க


25 . பால்கார் கணக்கும் என்னோட கணக்கும்
ஒத்து போசு கொண்டாடுங்க :


26 . துணி துவைக்கிற சோப்பு வாரம் முழுவதும்
வந்தது கொண்டாடுங்க :


27 . மளிகை கடைகாரர் சாமான் கூட
சரியான ரசீதும் கொடுத்து அனுப்பினார்
கொண்டாடுங்க:


28 . பக்கத்துக்கு வீடு சிடு முஞ்சி மாமி இன்னைக்கு
என்ன பாத்து ஸ்மைல் பண்ணுனாங்க கொண்டாடுங்க :


29 . வேலைக்காரம்மா இந்த மாசம் அட்வான்ஸ் கேக்கல
கொண்டாடுங்க :

Saturday, November 28, 2009

8. தமிழ்தான் நீயா?

தமிழ்ப் பெண்ணே தமிழ்ப் பெண்ணே

தமிழ்ப டித்தாயா?

தமிழ்ப டித்தேன் தமிழ்ப டித்தேன்

தமிழப் பெண் நானே.

தமிழப் பெண்ணே தமிழப் பெண்ணே

தமிழை ஏன் படித்தாய்?

தமிழ் "படித்தேன்" அதை உண்ணத்தான்

தமிழ்ப டித்தேன் நான்.

அமிழ்தைத் தந்தால் தமிழைத் தள்ளி

அதை நீ உண்பாயா?

அமிழ்தும் தமிழுக் கதிக இனிப்பா?

அதுவா எனைவ ளர்க்கும்?

தமிழ்தான் நீயோ? நீதான் தமிழோ?

தமிழ்ப் பெண்ணே சொல்!

தமிழை யும்பார் என்னை யும்பார்

வேற்றுமை யே இல்லை!

7. தமிழ்நாடு ஒன்றுபடுக!

தமிழ்நா டே!என் தாய்நா டே!
தமிழைச் சேர்ந்தாய் எங்கள் உயிரில்
அமிழ்தைச் சேர்ந்தாய் எங்கள் வாழ்வில்
தமிழ்நா டேநீ வாழ்க! வாழ்க!

முத்தமிழ் அன்னாய்! முழுதும் நாங்கள்
ஒத்து வாழ்ந்தால் உனக்கும் நல்லது
செத்துக் கிடக்கும் எமக்கும் நல்லது
முத்தமிழ் அன்னாய் வாழ்க! வாழ்க!

குமரி தொடங்கி இமயம் வரைக்கும்
அமைந்த உன்றன் அளவும் குறைந்தது
தமிழர் மேன்மைத் தரமும் குறைந்தது
தமிழின் மேன்மைத் தரமும் குறைந்தது.

வாழ்விற் புதுமை மலரக் கண்டோம்!
தாழாத் தலைமுறை தழையச் செய்யும்
வாழைக் கன்றுகள் வளரக் கண்டோம்
வாழ்க அன்னாய் வாழ்க! வாழ்க!